Pages

Wednesday, April 21, 2010

இனிய மார்க்கம் இஸ்லாம்

எதிரிகளாலும் மதிக்கப்பட்ட நபி ஸல் அவர்கள்
இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதற்கு இரு முஸ்லிமல்லாதவர்களுக்கிடையே நடைபெற்ற கீழ்க்கண்ட உரையாடல் நல்லதொரு விளக்கமளிக்கிறது.உரையாடிய இருவரில் ஒருவர் ரோம் மன்னர் ஹிர்கல் (ஹெர்குலஸ்). மற்றொருவர் முஹம்மது நபி (ஸல்) அவர்களை எதிரியாக பாவித்திருந்த அபூஸுஃப்யான்.அபூ ஸுஃப்யான் மற்றும் குறைஷி காஃபிர்களுடன் நபி (ஸல்) அவர்கள் ஹுதைபிய்யாவில் ஒப்பந்தம் செய்திருந்த காலம் அது. அக்காலத்தில் அபூ ஸுஃப்யானும் குறைஷி காஃபிர்களும், வணிகர்களாக ஷாம் (சிரியா) சென்றிருந்தார்கள். அபூ ஸுஃப்யான் தனது சக தோழர்களுடன் இருக்கும் போது அவரிடம் ஹெர்குலிஸ் (ஹிர்கல்) மன்னன், ஒரு தூதுவனை அனுப்பி ரோம் நகரப் பெருந்தலைவர்கள் கூடியிருக்கும் மஸ்ஜிதுல் அக்ஸாவில் தனது அவைக்கு வரும்படி அழைப்பு விடுத்தார். (ஹிர்கல் ரோமிலிருந்து அங்கு அப்போது வந்திருந்தார்.)அபூ ஸுஃப்யான் தனது குழுவுடன் அங்கு வரவே அவர்களை ஹிர்கல் வரவேற்று அமரவைத்தார். பிறகு தனது மொழிபெயர்ப்பாளரையும் அவைக்கு வரவழைத்தார். இதற்குப் பின் நாம் நேரடியாக அபூ ஸுஃப்யான் கூறுவதைக் கேட்போம்.
மன்னர்: தன்னை நபி என்று கூறும் அந்த மனிதருக்கு உங்களில் மிக நெருங்கிய உறவினர் யார்?
அபூஸுஃப்யான்: அவர்களுக்கு மிக நெருங்கிய உறவினன் நான்தான்.
மன்னர்: அவரை என்னருகே கொண்டு வாருங்கள் அவருடைய தோழர்களை அவருக்கு பின் பக்கம் இருக்க வையுங்கள்.(தனது மொழிபெயர்ப்பாளடம்) தன்னை நபியெனக் கூறும் அந்த மனிதரை (நபியை)ப் பற்றி இவ (அபூஸுஃப்யானி)ரிடம் நான் கேட்பேன். இவர் என்னிடம் பொய்யுரைத்தால் (அபூ ஸுஃப்யான் தோழர்களான) நீங்கள் இவர் பொய் கூறுகிறார் என்று தெரிவிக்கவும். இதனை மொழிபெயர்த்து இவர்களிடம் கூறு.
அபூஸுஃப்யான் (மனதிற்குள்): நான் பொய் கூறுவதாக என் நண்பர்கள் சொல்லி விடுவார்களோ என்ற வெட்கம் மட்டும் எனக்கு இல்லாவிட்டால் அல்லாஹ்வின் மீதாணையாக! நபியவர்களைப் பற்றி நான் பொய் சொல்லியிருப்பேன்.
மன்னர்: உங்களில் அவரது குடும்பம் எப்படிப்பட்டது?
அபூஸுஃப்யான்: அவர் எங்களில் நல்ல குடும்பத்தைச் சார்ந்தவர்.
மன்னர்: இதற்கு முன்பு (இறைவன் ஒருவன். நான் அவனது தூதன் என்ற) இச்சொல்லை உங்களில் யாராவது சொல்லியிருக்கின்றனரா?
அபூஸுஃப்யான்: இல்லை.
மன்னர்: ‘’இவரது முன்னோர்களில் யாராவது அரசராக இருந்தாரா?'’.
அபூஸுஃப்யான்: இல்லை.
மன்னர்: அவரை பின்பற்றுபவர்கள் மக்களில் சிறந்தவர்களா அல்லது எளியவர்களா?
அபூஸுஃப்யான்: எளியவர்களே பின்பற்றுகிறார்கள்.
மன்னர்: அவர்கள் அதிகரிக்கின்றனரா? குறைகின்றனரா?
அபூஸுஃப்யான்: இல்லை! அதிகரிக்கின்றனர்.
மன்னர்: அவரது மார்க்கத்தில் இணைந்த பின் யாராவது அம்மார்க்கத்தின் மீது வெறுப்பு கொண்டு மதம் மாறுகின்றனரா?
அபூஸுஃப்யான்: இல்லை.
மன்னர்: இச்சொல்லைச் சொல்வதற்கு முன்பு அவர் பொய் பேசுவார் என சந்தேகப் பட்டதுண்டா?
அபூஸுஃப்யான்: இல்லை.
மன்னர்: அவர் மோசடி செய்ததுண்டா?
அபூஸுஃப்யான்: இல்லை. நாங்கள் அவரிடம் தற்போது ஓர் உடன்படிக்கை செய்திருக் கிறோம். அதன்படி அவர் செயல்படுவாரா அல்லது மாட்டாரா என்பது எங்களுக்குத் தெரியாது. (நபியைப் பற்றி குறை கூற இந்த வாக்கியத்தைத் தவிர வேறு வாக்கியத்தை என் பேச்சின் இடையே சேர்க்க எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.)
மன்னர்: அவருடன் போர் செய்துள்ளீர்களா?
அபூஸுஃப்யான்: ஆம்!
மன்னர்: அவருடன் நீங்கள் புரிந்த போர் முடிவு எவ்வாறு இருந்தது?
அபூஸுஃப்யான்: அவருக்கும் நமக்கும் இடையே போர் ஏற்றம் இறக்கமாக, அதாவது சில நேரம் அவர் எங்களை வெல்வார் சிலநேரம் நாங்கள் அவரை வெல்வோம்.
மன்னர்: அவர் உங்களுக்கு என்ன கட்டளையிடுகிறார்?
அபூஸுஃப்யான்: அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனுக்கு எதையும் இணை ஆக்காதீர்கள். உங்கள் முன்னோர் கூறியதை விட்டுவிடுங்கள் என்று கூறி தொழுகை, வாய்மை, கற்பொழுக்கம், உறவைப் பேணுதல் போன்ற நற்பண்புகளைக் கட்டளையிடுகிறார்.அனைத்தையும் ஆழ்ந்து கேட்ட மன்னர் தனது மொழிபெயர்ப்பாளடம் தான் இனி பேசுவதை மொழிபெயர்த்துக் கூறச் சொன்னார். அதாவது:"உன்னிடம் அவரது குடும்பம் பற்றிக் கேட்டேன். ‘’அவர் உங்களில் நல்ல குடும்பத்தைச் சார்ந்தவர்'’ என்றாய். இவ்வாறுதான் இறைத்தூதர்கள், சமுதாயத்தில் நல்ல குடும்பத்தில் அனுப்பப்படுவார்.அடுத்து, உன்னிடம் ‘’இதற்கு முன்பு (இறைவன் ஒருவன். நான் அவனது தூதன் என்ற) இச்சொல்லை உங்களில் யாராவது சொல்லியிருக்கின்றனரா?'’ எனக் கேட்டேன், ‘’இல்லை'’ என்றாய். இச்சொல்லை இதற்கு முன்பு யாராவது சொல்லியிருந்தால் அவரைப் பின்பற்றி இவரும் கேள்விப்பட்டதை கூறுகிறார் என்று சொல்லியிருப்பேன்.அடுத்து உன்னிடம் ‘’இவரது முன்னோர்களில் யாராவது அரசராக இருந்தாரா?'’ எனக் கேட்டேன். நீ ‘’இல்லை'’ என்றாய். அங்ஙனம் இவரது முன்னோர்களில் யாராவது மன்னராக இருந்திருந்தால் அவருடைய முன்னோரின் அரசாட்சியை ஆசைப்படுகிறார் என்றிருப்பேன்.அடுத்து உன்னிடம் ‘’(இறைவன் ஒருவன். நான் அவனது தூதன் என்ற) இச்சொல்லைச் சொல்வதற்கு முன்பு அவர் பொய்யுரைப்பார் என சந்தேகப்பட்டதுண்டா?'’ எனக் கேட்டேன். நீ ‘’இல்லை'’ என்றாய். மக்களிடம் பொய்யுரைக்கத் துணியாதவர் நிச்சயம் அல்லாஹ்வின் மீது பொய்யுரைக்க மாட்டார் என்பதை நன்கு புரிந்துகொண்டேன்.அடுத்து அவரை பின்பற்றுபவர்கள் மக்களில் சிறந்தவர்களா அல்லது எளியவர்களா'’? என்று உன்னிடம் கேட்டேன் ‘’அவரை சாதாரண எளிய மக்கள்தான் பின்பற்றுகிறார்கள்'’ என்று கூறினாய். (பெரும்பாலும் ஆரம்பத்தில்) அத்தகைய மக்கள்தான் இறைத்தூதர்களைப் பின்பற்றுவார்கள்.அடுத்து உன்னிடம் ‘’அவரைப் பின்பற்றுபவர்கள் அதிகரிக்கின்றனரா குறைகின்றனரா'’ என்று கேட்டேன். ‘’அதிகரிக்கின்றனர்'’ என்றாய் நீ. அவ்வாறே இறை நம்பிக்கை முழுமை அடையும்வரை அது வளர்ந்து கொண்டே இருக்கும்.அடுத்து உன்னிடம் ‘’அவரது மார்க்கத்தில் இணைந்த பின் யாராவது அம்மார்க்கத்தின் மீது வெறுப்பு கொண்டு மதம் மாறி இருக்கின்றனரா'’ என்று கேட்டேன். நீ ‘’இல்லை'’ என்றாய். ஆம்! இறை நம்பிக்கையின் நிலை அவ்வாறுதான் இருக்கும். அதன் தெளிவு உள்ளத்துடன் ஒன்றோடு ஒன்றாக கலந்துவிட்டால் எவரும் அதைவிட்டு வெளியேற மாட்டார்கள்.அடுத்து உன்னிடம் ‘’அவர் மோசடி செய்ததுண்டா'’? என்று கேட்டேன். நீ ‘’இல்லை'’ என்றாய். அவ்வாறே இறைத்தூதர்கள் மோசடி செய்ய மாட்டார்கள்.அடுத்து உன்னிடம் அவர் உங்களுக்கு என்ன கட்டளையிடுகிறார்? என்று கேட்டேன். ‘’அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனுக்கு எதையும் இணையாக்காதீர்கள் என்று கட்டளையிட்டு, சிலை வணக்கத்தை விட்டு உங்களைத் தடுக்கிறார். மேலும் தொழுகை, வாய்மை, கற்பொழுக்கம், உறவைப் பேணுதல் போன்ற நற்பண்புகளை ஏவுகிறார்'’ என்று கூறினாய். ‘’நீ கூறியவை அனைத்தும் உண்மையாக இருந்தால் என்னிரு கால்களுக்குக் கீழுள்ள இவ்விடங்களை அவரே அரசாள்வார். நிச்சயம் அவர் தோன்றுவார் என்பது எனக்குத் தெரியும். ஆனால், உறுதியாக அவர் உங்களிலிருந்து வருவார் என நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. அவரைச் சென்றடையும் வழி எனக்குத் தெரிந்திருப்பின் சிரமம் பாராது அவரை சந்திப்பேன். நான் அவரருகில் இருந்தால் அவருடைய கால்களைக் கழுவுவேன்'’ என்றார்.பின்பு புஸ்ராவின் ஆளுநர் வாயிலாக தனக்காக திஹ்யாவிடம் நபி (ஸல்) கொடுத்தனுப்பிய கடிதத்தைத் தன்னிடம் கொடுக்க வேண்டினார். ஆளுநர் அதனை மன்னனிடம் தந்தார். அக்கடிதத்தை மன்னர் படித்து முடித்தபோது அங்கே மக்களின் சப்தங்கள் உயர்ந்தன. கூச்சல்கள் அதிகமாயின.அபூ ஸுஃப்யான் கூறுகிறார்: ‘’எங்களை வெளியேற்றும்படி கூற நாங்கள் வெளியேற்றப் பட்டோம். நாங்கள் வெளியேறும் போது நான் என் தோழர்களிடம் கூறினேன்: ரோமர்களின் மன்னன்கூட அவரைக் கண்டு அஞ்சும் அளவுக்கு அபூ கபிஷாவின் பேரனுடைய காரியம் உறுதியாகி விட்டது'’அப்போதே அல்லாஹ்வின் தூதர் விஷயத்தில் நிச்சயம் அவர்கள் வெற்றி பெறுவார்கள் என நான் நம்பிக்கையுடன் இருந்தேன். முடிவில் அல்லாஹ் எனக்கு இஸ்லாமை ஏற்க அருள் செய்தான் என்று அபூஸுஃப்யான் கூறினார்.(ஆதாரம்: ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

Tuesday, April 20, 2010

அம்பாறை மாவட்டம்


அம்பாறை மாவட்டம் இலங்கையின் 25 மாவட்டங்களில் ஒன்றாகும். இது கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ளது. அம்பாறை நகரம் இதன் தலைநகரமாகும். இந்நகரம் இலங்கைத் தலைநகரமான கொழும்பிலிருந்து 320 கிலோமீற்றார் தூரத்தில் அமைந்துள்ளது. சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் ஆகிய மூவினத்தவரும் இந்நகரத்தில் வசிக்கினறன்ர். அம்பாறை மாவட்டம் 4 பாராளுமன்ற தொகுதிகளைக் கொண்டுள்ளது. இது 504 கிராமசேவகர் பிரிவுகளையும் 19 பிரதேச செயலர் பிரிவுகளையும் கொண்டுள்ளது.
அம்பாறை மாவட்டத்தைப் பொறுத்தவரை அங்கு வாழும் மொத்தச் சனத்தொகையில் 44.0 வீதமானோர் முஸ்லிம்களாவர். சிங்களவர்கள் 37.5 வீதம், இலங்கைத் தமிழர்கள் 18.3 வீதமாகும். மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 1967 ஆம் ஆண்டு தனி மாவட்டமாகப் பிரித்தெடுக்கப்பட்டது.

இலங்கையின் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை

இலங்கையின் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
1977 இல் புதிய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது, அதன் ஒரு பகுதியாக அறிமுகப் படுத்தப்பட்டதே இலங்கையின் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை. இலங்கை அரசியல் சட்டத்தின் 14 ஆவது அத்தியாயம் இது தொடர்பான விடயங்கள் பற்றிக் கூறுகின்றது. இலங்கையில், பாராளுமன்றம், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் இம் முறைப்படியே நடைபெறுகின்றன.
தொடக்கத்தில் இலங்கையில் இது ஒரு மூடிய கட்சிப் பட்டியல் முறையாகவே அறிமுகப்படுத்தபட்டது எனினும், பின்னர் தேர்தல்கள் எதுவும் நடைபெற முன்னரே உடனடியாக இது ஒரு திறந்த கட்சிப் பட்டியல் முறையாக மாற்றப்பட்டது.
பொருளடக்கம்[மறை]
1 தேர்தல் மாவட்டங்கள்
2 வேட்பாளர்கள்
3 வாக்களிப்பு முறைமை
4 கட்சிகளுக்கான உறுப்பினர் எண்ணிக்கைகளைத் தீர்மானித்தல்
5 உறுப்பினர் தெரிவு
6 எடுத்துக்காட்டு
//
[தொகு] தேர்தல் மாவட்டங்கள்
இலங்கையில் தேர்தல்கள் தேர்தல் மாவட்டங்களின் அடிப்படையிலேயே நடைபெறுகின்றன. ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலும் போட்டியிடும் கட்சிளும், சுயேச்சைக் குழுக்களும் விகிதாசாரப் பிரதிநிதித்துவ அடிப்படையில் உறுப்பினர்களைப் பெறுகின்றன. பாராளுமன்ற மற்றும் மாகாண சபைத் தேர்தல்களுக்காக 22 தேர்தல் மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் 20 தேர்தல் மாவட்டங்கள் நாட்டின் நிர்வாக மாவட்ட எல்லைகளையே தங்கள் எல்லைகளாகவும் கொண்டுள்ளன. ஏனைய இரண்டு மாவட்டங்களில் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டம், இரண்டு நிர்வாக மாவட்டங்களையும், வன்னித் தேர்தல் மாவட்டம், மூன்று நிர்வாக மாவட்டங்களையும் தம்முள் அடக்கியுள்ளன. உள்ளூராட்சித் தேர்தல்களைப் பொறுத்தவரை, ஒவ்வொரு உள்ளூராட்சிச் சபைகளினதும் ஆளுகைக்கு உட்பட்ட பகுதி முழுவதும் ஒரே அலகாகக் கொள்ளப்படுகின்றது.
[தொகு] வேட்பாளர்கள்
இலங்கையில் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையில் கட்சிப் பட்டியல் மூலம் அல்லது சுயேச்சைக் குழுக்களின் பட்டியல் மூலமே வேட்பாளர்கள் நிறுத்தப்படுகின்றார்கள். இலங்கையில் அங்கீகாரம் பெற்ற கட்சி அல்லது சுயேச்சைக் குழுக்கள் தாங்கள் நியமிக்கும் வேட்பாளர்கள் அடங்கிய பட்டியல்களுடன் தங்கள் நியமனப் பத்திரங்களைத் தாக்கல் செய்வார்கள். ஒவ்வொரு தேர்தல் மாவட்டங்களுக்கும் தனித்தனியாக நியமனப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்படும். ஒவ்வொரு குழுவின் பட்டியலிலும், அந்தந்த மாவட்டங்களிலிருந்து தெரிவு செய்யப்படவுள்ள உறுப்பினர் எண்ணிக்கையை விட மூன்று மேலதிக வேட்பாளர்கள் அடங்கியிருக்கவேண்டும்.
[தொகு] வாக்களிப்பு முறைமை
இலங்கையில் வாக்களிப்பு திறந்த கட்சிப் பட்டியல் முறையில் நடைபெறுவதால், கட்சியிலிருந்து தெரிவாகவுள்ள உறுப்பினர்களின் ஒழுங்குவரிசையைக் கட்சிகள் தீர்மானிப்பதில்லை. ஒவ்வொரு வாக்காளரும், தாங்கள் விரும்பிய கட்சி அல்லது குழுவுக்கும், அக் கட்சி அல்லது குழுவினால் நியமிக்கப்பட்ட வேட்பாளர்களில் குறைந்தது மூன்று பேருக்கும் வாக்களிக்க முடியும். இவ்வாறு தனிப்பட்ட வேட்பாளர்கள் பெறும் விருப்பு வாக்குகளின் எண்ணிக்கையை அடிப்படையாக வைத்தே ஒவ்வொரு கட்சி வேட்பாளர்களினதும் ஒழுங்கு வரிசை தீர்மானிக்கப்படுகின்றது.
[தொகு] கட்சிகளுக்கான உறுப்பினர் எண்ணிக்கைகளைத் தீர்மானித்தல்
முதலில் கட்சிகள் பெற்ற வாக்குகள் எண்ணப்படும். அதிக வாக்குகளைப் பெற்ற கட்சி அல்லது குழுவுக்குரிய போனஸாக அக்கட்சியிலிருந்து ஒரு உறுப்பினர் தெரிவு செய்யப்படுவார்.
உறுப்பினர்களை ஒதுக்குவதற்காகத் தகுதி பெறும் ஒரு கட்சியோ அல்லது குழுவோ குறைந்த பட்சம் மொத்த வாக்குகளில் இருபதில் ஒரு பகுதியையாவது (5%) பெற்றிருக்கவேண்டும். இவ்வாறு பெறாத கட்சிகளும், குழுக்களும் நீக்கப்படும்.
அளிக்கப்பட்ட மொத்த வாக்கு எண்ணிக்கையிலிருந்து தகுதி பெறாத கட்சிகளும் குழுக்களும் பெற்ற வாக்குகள் கழிக்கப்படும். மிகுதி, அத்தேர்தல் மாவட்டத்திலிருந்து தெரிவாகவுள்ள உறுப்பினர் எண்ணிக்கையிலிருந்து ஒன்றைக் குறைத்து வரும் எண்ணினால் பிரிக்க வரும் ஈவு, ஆரம்பச் சுற்றில் ஒரு உறுப்பினரைப் பெறுவதற்குத் தேவையான வாக்கு எண்ணிக்கையாகும். மேற்படி ஈவினால் தகுதிபெற்ற கட்சிகளும், குழுக்களும் பெற்ற வாக்குகளை வகுக்கும் போது கிடைக்கும் ஈவுகளுக்குச் சமனான எண்ணிக்கையில் முதற் சுற்றில் உறுப்பினர்கள் ஒதுக்கப்படுவார்கள்.
முதற் சுற்றின் பின்னர் இன்னும் ஒதுக்குவதற்கு இடங்கள் இருப்பின் முதற் சுற்றில் வகுக்கும்போது கிடைத்த மிச்சங்கள் கவனத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும். கூடுதலாக மிச்சம் கிடைத்த கட்சிக்கு மிகுதியாகவுள்ள இடங்களில் முதலாவது இடம் வழங்கப்படும். முற்றாக ஒதுக்கி முடியும் வரை ஏனைய இடங்களும் இவ்வாறே கூடிய மிச்சம் உள்ள கட்சிகளுக்கு வழங்கப்படும்.
[தொகு] உறுப்பினர் தெரிவு
ஒவ்வொரு உறுப்பினரும் பெற்ற விருப்பு வாக்குகள் எண்ணப்படும். ஒவ்வொரு கட்சி அல்லது குழுவுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு அக்கட்சி அல்லது குழுவில் கூடிய எண்ணிக்கை வாக்குகளைப் பெற்ற வேட்பாளர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.

தேர்தல் மாவட்டங்களும், வாக்கெடுப்புப் பிரிவுகளும்




தேர்தல் மாவட்டங்களும், வாக்கெடுப்புப் பிரிவுகளும்
[தொகு] கொழும்பு மாவட்டம்
கொழும்பு - வடக்கு
கொழும்பு - மத்தி
பொரளை
கொழும்பு - கிழக்கு
கொழும்பு - மேற்கு
தெகிவளை
இரத்மலானை
கொலன்னாவ
கோட்டை
கடுவலை
அவிசாவளை
ஹோமாகமை
மகரகமை
கெஸ்பாவ
மொரட்டுவை
[தொகு] கம்பகா மாவட்டம்
வத்தளை
நீர்கொழும்பு
கந்தானை
திவுலப்பிட்டியா
மீரிகமை
மினூவாங்கொடை
அத்தனகலை
கம்பஹா
யா-எலை
மகரை
தொம்பே
பியகமை
களனி
[தொகு] கண்டி மாவட்டம்
கலகெதரை
ஹாரிஸ்பத்துவை
பாததும்பறை
உடதும்பறை
தெல்தெனியா
குண்டசாலை
ஹேவாஹெட்ட
செங்கடகலை
கண்டி
யட்டிநுவரை
உடுநுவரை
கம்பளை
நாவலப்பிட்டி
[தொகு] மாத்தளை மாவட்டம்
தம்புள்ளை
லக்கலை
மாத்தளை
இரத்தோட்டை
[தொகு] நுவரெலியா மாவட்டம்
மஸ்கெலியா
கொத்மலை
ஹங்குரன்கெத்தை
வலபனை
[தொகு] திருகோணமலை மாவட்டம்
சேருவிலை
திருகோணமலை
மூதூர்
[தொகு] காலி மாவட்டம்
பலபிட்டி
அம்பலாங்கொடை
கரந்தேனியா
பெந்தரை-எல்பிட்டியா
கினிதுமை
பத்தேகமை
இரத்கமை
காலி
அக்மீமனை
ஹபராதுவை
[தொகு] மாத்தறை மாவட்டம்
தெனியாயை
ஹக்மனை
அக்குரஸ்ஸை
கம்புருபிட்டியை
தெவிநுவரை
மாத்தறை
வெலிகாமம்
[தொகு] அம்பாந்தோட்டை மாவட்டம்
முல்கிரிகலை
பெலியத்தை
தங்காலை
திஸ்ஸமகராமை
[தொகு] களுத்துறை மாவட்டம்
பாணந்துறை
பண்டாரகமை
ஹொரனை
புளத்சிங்களை
மத்துகமை
களுத்துறை
பேருவளை
அகலவத்தை
[தொகு] யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டம்
ஊர்காவற்றுறை
வட்டுக்கோட்டை
காங்கேசந்துறை
மனிப்பாய்
கோப்பாய்
உடுப்பிட்டி
பருத்தித்துறை
சாவகச்சேரி
நல்லுர்
யாழ்ப்பாணம்
கிளிநொச்சி
[தொகு] வன்னித் தேர்தல் மாவட்டம்
வவுனியா
மன்னார்
முல்லைத்தீவு
[தொகு] மட்டக்களப்பு மாவட்டம்
கல்குடா
மட்டக்களப்பு
பட்டிருப்பு
[தொகு] திகாமடுல்லை தேர்தல் மாவட்டம்
அம்பாறை
சம்மாந்துறை
கல்முனை
பொத்துவில்
[தொகு] குருநாகல் மாவட்டம்
கல்கமுவை
நிக்கவரட்டிய
யாப்பகுவை
கிரியாலை
வாரியபொலை
பண்டுவஸ்நுவரை
பிங்கிரியை
கட்டுகம்பொலை
குளியாப்பிட்டி
தம்பதெனியா
பொல்காவலை
குருநாகல்
மாவதகமை
தொடன்கஸ்லந்தை
[தொகு] புத்தளம் மாவட்டம்
புத்தளம்
ஆனைமடுவை
சிலாபம்
நாத்தாண்டியா
வென்னப்புவை
[தொகு] அனுராதபுரம் மாவட்டம்
மதவாச்சி
ஹொரவபொத்தானை
அனுராதபுரம் - கிழக்கு
அனுராதபுரம் - மேற்கு
கலாவெவை
மிகிந்தலை
கெக்கிராவை
[தொகு] பொலன்னறுவை மாவட்டம்
மின்னேரியா
மெதிரிகிரியை
பொலன்னறுவை
[தொகு] பதுளை மாவட்டம்
பண்டாரவளை
பசறை
அப்புத்தளை
[தொகு] மொனராகலை மாவட்டம்
பிபிலை
மொனராகலை
வெள்ளவாயை
[தொகு] இரத்தினபுரி மாவட்டம்
எகலியகொடை
இரத்தினபுரி
பெல்மதுளை
பலாங்கொடை
இரக்குவானை
நிவித்திகலை
கலவானை
கொலொன்னை
[தொகு] கேகாலை மாவட்டம்
தெடிகமை
கலிகமுவை
கேகாலை
இரம்புக்கனை
மாவனல்லை
அறநாயக்கை
எட்டியாந்தொட்டை
ருவான்வெல்லை
தெரனியாகலை

இலங்கை தேர்தல் மாவட்டங்கள்




இலங்கை 22 தேர்தல் மாவட்டங்களைக் கொண்டது, இவை 160 வாக்கெடுப்பு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த 22 மாவட்டங்களுக்கும் விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் தேர்தல் நடைபெறுகின்றது.



பொருளடக்கம்[மறை]
1 தேர்தல் மாவட்டங்களும், வாக்கெடுப்புப் பிரிவுகளும்
1.1 கொழும்பு மாவட்டம்
1.2 கம்பகா மாவட்டம்
1.3 கண்டி மாவட்டம்
1.4 மாத்தளை மாவட்டம்
1.5 நுவரெலியா மாவட்டம்
1.6 திருகோணமலை மாவட்டம்
1.7 காலி மாவட்டம்
1.8 மாத்தறை மாவட்டம்
1.9 அம்பாந்தோட்டை மாவட்டம்
1.10 களுத்துறை மாவட்டம்
1.11 யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டம்
1.12 வன்னித் தேர்தல் மாவட்டம்
1.13 மட்டக்களப்பு மாவட்டம்
1.14 திகாமடுல்லை தேர்தல் மாவட்டம்
1.15 குருநாகல் மாவட்டம்
1.16 புத்தளம் மாவட்டம்
1.17 அனுராதபுரம் மாவட்டம்
1.18 பொலன்னறுவை மாவட்டம்
1.19 பதுளை மாவட்டம்
1.20 மொனராகலை மாவட்டம்
1.21 இரத்தினபுரி மாவட்டம்
1.22 கேகாலை மாவட்டம்

Monday, April 19, 2010

srilanka map




கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அமைவு: 7°00′00″N, 81°00′00″E
புவியில் அமைவிடம்
இலங்கையின் புவியியல் அமைப்பு அல்லது நிலவமைப்புப் படம்
இலங்கைஇலங்கை, இந்தியாவுக்குத் தெற்கே, இந்தியப் பெருங்கடலிலுள்ள ஒரு தீவு நாடாகும்.

இலங்கை புவியியல்
புவியியல் ஆள்கூறுகள் 7 00 வ, 81 00 கி
பரப்பளவு 65,610 ச.கிமீ
நிலப்பரப்பளவு 64,740 ச.கிமீ
நீர்ப்பரப்பளவு 870 ச.கிமீ
கரையோர நீளம் 1,340 கிமீ
நில எல்லைகள் 0 கிமீ
பொருளடக்கம் [மறை]
1 கடல்சார் உரிமைகள்
2 புவியியல் குறிப்புகள்
3 பின்வருவனவற்றையும் பார்க்கவும்
4 துணை நூல்கள்
5 வெளி இணைப்புகள்


[தொகு] கடல்சார் உரிமைகள்
தொடர்ச்சியான பகுதியாக (contiguous zone) 24 கடல் மைல் தொலைவையும், கண்டமேடையாக 200 கடல் மைல் தூரத்தையும் கொண்டுள்ளது.




கடல்சார் உரிமைகள்:
தொடர்ச்சியான பகுதி: 24 கடல் மைல் (nm)
கண்ட மேடை: 200 கடல் மைல் (nm)
பிரத்தியேக பொருளாதார வலயம்: 200 nm
பிரதேச கடல்: 12 nm

காலநிலை: tropical பருவப் பெயர்ச்சிக் காற்று; வடகீழ்ப் பருவப் பெயர்ச்சிக் காற்று(டிசம்பரிலிருந்து மார்ச் வரை); தென்மேற் பருவப் பெயர்ச்சிக் காற்று(ஜூனிலிருந்து அக்டோபர் வரை)

நிலத்தோற்றம்: பெரும்பாலும் தாழ்வானது, தட்டை முதல் சிற்றளவான ஏற்ற இறக்கங்கள் கொண்டது; மலைகள் தெந் மத்திய பகுதியில்.

நிலைப்பட அந்தலைகள்:
மிகத் தாழ்ந்த புள்ளி: இந்து சமுத்திரம் 0 m
அதியுயர் புள்ளி: பீதுருதாலகால 2,524 m

இயற்கை வளங்கள்: சுண்ணாம்புக் கல், காரீயம், கனிம மணல்கள், இரத்தினங்கள், பொஸ்பேற்றுகள், களி, நீர் மின்சாரம்

நிலப் பயன்பாடு:
பயிர்த்தொழில் செய்யத்தக்க நிலம்: 14%
நிலையான பயிர்: 15%
நிலையான [புல்வெளி]]கள்: 7%
காடுகளும் மரச்செறிவுகளும்: 32%
ஏனையவை: 32% (1993 கணக்கீடு)

நீர்ப்பாசனமுள்ள நிலங்கள்: 5,500 சது. கிமீ(1993 கணக்கீடு)

இயற்கை அழிவுகள்: அவ்வப்போது தோன்றும் புயல்களும், சூறாவளிகளும்.

சூழல் - தற்காலச் சிக்கல்கள்: காடழிப்பு; மண்ணரிப்பு; சட்டவிரோத வேட்டையினாலும், நகராக்கத்தினாலும், வனவிலங்குகள் ஆபத்துக்குள்ளாகியிருத்தல்; அகழ்வு நடவடிக்கைகளினாலும், அதிகரித்துவரும் மாசடைதலாலும், கரையோர degradation; தொழிற்சாலைக் கழிவுகளாலும், கழிவு நீர் கலத்தலாலும், நன்நீர் வளங்கள் மாசடைதல்; கழிவு அகற்றல்; கொழும்பில் காற்று மாசடைதல்.

சுற்றுச்சூழல் - அனைத்துலக ஒப்பந்தங்கள்:
party to: உயிரினப் பன்வகைமை (Biodiversity), காலநிலை மாற்றம், பாலைவனமாதல், அழியும் நிலையிலுள்ள உயிரினங்கள், சுற்றுச் சூழல் மாற்றம், ஆபத்து விளைவிக்ககூடிய கழிவுகள், கடற் சட்டம், அணுவாயுத சோதனைத் தடை, ஓசோன் படலப் பாதுகாப்பு, கப்பல்கள் தொடர்பான மாசடைதல், ஈர நிலங்கள்.
கையெழுத்திடப்பட்டது, ஆனால் ஏற்கப்படவில்லை: கடல்வாழ் உயிரினப் பாதுகாப்பு

[தொகு] புவியியல் குறிப்புகள்
முக்கிய இந்தியப் பெருங்கடல் கடற்பாதைக்கு அண்மையிலுள்ள அமைவிடம்.
இந்து தொல் நம்பிக்கைகளின்படி இராமபிரானால் கட்டப்பட்டதாகக் கருதப்படும்Adam's Bridge எனப்படும், இந்தியாவுடனான நிலத்தொடர்பு. இது தற்போது பெரும்பாலும் கடலுள் அமிழ்ந்தும் சில பகுதிகள் மட்டும் சங்கிலித் தொடர் போன்ற திட்டுகளாகக் கடல் மட்டத்துக்கு மேல் தெரியும் படியாகவும் அமைந்துள்ளது.