Pages

Wednesday, March 31, 2010

ஆங்கிலம் கற்போம்

இங்கே "do a job" எனும் ஒரு வார்த்தையை இன்றையப் பாடமாக எடுத்துள்ளோம். இவ்வார்த்தையின் தமிழ் அர்த்தம் "செய் ஒரு வேலை" என்பதாகும். இதை "நான் செய்கின்றேன் ஒரு வேலை, நான் செய்தேன் ஒரு வேலை, நான் செய்வேன் ஒரு வேலை" என ஒரே வார்த்தையை 73 விதமாக மாற்றி பயிற்சி செய்வதே இப்பாடத்திட்டத்தின் நோக்கமாகும். இது மிகவும் இலகுவாகவும் அதிவிரைவாகவும் ஆங்கிலம் கற்றுக்கொள்ளக் கூடிய ஓர் பயிற்சி முறையாகும்.

do a job

1. I do a Job.
நான் செய்கின்றேன் ஒரு வேலை.

2. I am doing a job.
நான் செய்துக்கொண்டிருக்கின்றேன் ஒரு வேலை.

3. I did a job.
நான் செய்தேன் ஒரு வேலை.

4. I didn't do a job.
நான் செய்யவில்லை ஒரு வேலை.

5. I will do a job.
நான் செய்வேன் ஒரு வேலை.
நான் செய்கிறேன் (சற்றுப் பிறகு) ஒரு வேலை.

6. I won't do a job.
நான் செய்யமாட்டேன் ஒரு வேலை.

7. Usually I don't do a job.
சாதாரணமாக நான் செய்கிறேனில்லை ஒரு வேலை.

8. I am not doing a job.
நான் செய்துக் கொண்டிருக்கின்றேனில்லை ஒரு வேலை

9. I was doing a job.
நான் செய்துக் கொண்டிருந்தேன் ஒரு வேலை.

10. I wasn't doing a job.
நான் செய்துக் கொண்டிருக்கவில்லை ஒரு வேலை.

11. I will be doing a job.
நான் செய்துக் கொண்டிருப்பேன் ஒரு வேலை.

12. I won't be doing a job.
நான் செய்துக் கொண்டிருக்கமாட்டேன் ஒரு வேலை.

13. I am going to do a job.
நான் செய்யப் போகின்றேன் ஒரு வேலை.

14. I was going to do a job.
நான் செய்யப் போனேன் ஒரு வேலை.

15. I can do a job.
16. I am able to do a job.
எனக்கு செய்ய முடியும் ஒரு வேலை

17. I can't do a job.
18. I am unable to do a job.
எனக்கு செய்ய முடியாது ஒரு வேலை.

19. I could do a job.
20. I was able to do a job.
எனக்கு செய் முடிந்தது ஒரு வேலை.

21. I couldn't do a job.
22. I was unable to do a job.
எனக்கு செய்ய முடியவில்லை ஒரு வேலை.

23. I will be able to do a job.
எனக்கு செய்ய முடியுமாக இருக்கும் ஒரு வேலை.

24. I will be unable to do a job.
எனக்கு செய்ய முடியாமலிருக்கும் ஒரு வேலை.

25. I may be able to do a job.
எனக்கு செய்ய முடியுமாக இருக்கலாம் ஒரு வேலை.

26. I should be able to do a job.
எனக்கு செய்ய முடியுமாகவே இருக்கும் ஒரு வேலை

27. I have been able to do a job. (Perfect Tense பார்க்கவும்)
சற்றுமுன்பிருந்து/கிட்டடியிலிருந்து எனக்கு செய்யமுடியுமாக இருக்கின்றது ஒரு வேலை.

28. I had been able to do a job.
அக்காலத்திலிருந்து/அன்றிலிருந்து எனக்கு செய்யமுடியுமாக இருந்தது ஒரு வேலை.

29. I may do a job.
30. I might do a job.
31. I may be doing a job.
நான் செய்யலாம் ஒரு வேலை.

32. I must do a job.
நான் செய்ய வேண்டும் ஒரு வேலை.(அழுத்தம்)

33. I must not do a job.
நான் செய்ய வேண்டியதில்லை ஒரு வேலை.
நான் செய்யக் கூடாது ஒரு வேலை.

34. I should do a job.
நான் செய்யவே வேண்டும் ஒரு வேலை. (மிக அழுத்தம்)

35. I shouldn't do a job.
நான் செய்யவே வேண்டியதில்லை ஒரு வேலை.
நான் செய்யவே கூடாது ஒரு வேலை.

36. I ought to do a job.
நான் எப்படியும் செய்யவே வேண்டும் ஒரு வேலை. (மிக மிக அழுத்தம்)

37. I don't mind doing a job.
எனக்கு ஆட்சேபனையில்லை செய்ய ஒரு வேலை.

38. I have to do a job.
நான்/எனக்கு செய்ய வேண்டும் ஒரு வேலை.

39. I don't have to do a job.
நான்/எனக்கு செய்ய வேண்டியதில்லை ஒரு வேலை.

40. I had to do a job.
நான்/எனக்கு செய்ய வேண்டி ஏற்பட்டது ஒரு வேலை.

41. I didn't have to do a job.
நான்/எனக்கு செய்ய வேண்டி ஏற்படவில்லை ஒரு வேலை.

42. I will have to do a job.
எனக்கு செய்ய வேண்டி ஏற்படும் ஒரு வேலை.

43. I won't have to do a job.
எனக்கு செய்ய வேண்டி ஏற்படாது ஒரு வேலை.

44. I need do a job.
எனக்கு அவசியம் செய்ய (வேண்டும்) ஒரு வேலை.

45. I needn’t do a job.
எனக்கு அவசியமில்லை செய்ய ஒரு வேலை.

46. He seems to be doing a job.
அவன் செய்கின்றான் போல் தெரிகின்றது ஒரு வேலை.

47. He doesn't seem to be doing a job.
அவன் செய்கின்றான் போல் தெரிகின்றதில்லை ஒரு வேலை.

48. He seemed to be doing a job.
அவன் செய்கிறான் போல் தெரிந்தது ஒரு வேலை.

49. He didn't seem to be doing a job.
அவன் செய்கிறான் போல் தெரியவில்லை ஒரு வேலை

50. Doing a job is useful.
செய்வது(தல்) ஒரு வேலை பிரயோசனமானது.

51.
Useless doing a job.
பிரயோசனமில்லை செய்வது ஒரு வேலை.

52.
It is better to do a job.
மிக நல்லது செய்வது ஒரு வேலை.

53.
I had better do a job.
எனக்கு மிக நல்லது செய்வது ஒரு வேலை.

54.
I made him do a job.
நான் அவனை வைத்து செய்வித்தேன் ஒரு வேலை.

55.
I didn't make him do a job.
நான் அவனை வைத்து செய்விக்கவில்லை ஒரு வேலை

56.
To do a job I am going to USA.
செய்வதற்கு ஒரு வேலை நான் போகின்றேன் USA க்கு


57. I used to do a job.
நான் பழக்கப்பட்டிருந்தேன் செய்ய ஒரு வேலை.

58.
Shall I do a Job?
நான் செய்யவா ஒரு வேலை?

59.
Let’s do a job.
செய்வோம் ஒரு வேலை.

60.
I feel like doing a job.
எனக்கு நினைக்கின்றது செய்ய ஒரு வேலை.

61.
I don't feel like doing a job.
எனக்கு நினைக்கின்றதில்லை செய்ய ஒரு வேலை.

62.
I felt like doing a job.
எனக்கு நினைத்தது செய்ய ஒரு வேலை.

63.
I didn't feel like doing a job.
எனக்கு நினைக்கவில்லை செய்ய ஒரு வேலை.

64.
I have been doing a job.
நான் கிட்டடியிலிருந்து/சிலகாலமாக செய்துக் கொண்டிருக்கின்றேன் ஒரு வேலை.

65.
I had been doing a job.
நான் அன்றிலிருந்து/அக்காலத்திலிருந்து செய்துக்கொண்டிருந்தேன் ஒரு வேலை.

66.
I see him doing a job.
எனக்கு தெரிகின்றது அவன் செய்கின்றான் ஒரு வேலை.

67.
I don't see him doing a job.
எனக்கு தெரிகின்றதில்லை அவன் செய்கின்றான் ஒரு வேலை.

68.
I saw him doing a job.
எனக்கு தெரிந்தது அவன் செய்கிறான் ஒரு வேலை.

69.
I didn't see him doing a job.
எனக்கு தெரியவில்லை அவன் செய்கிறான் ஒரு வேலை.

70.
If I do a job I will get experience.
நான் செய்தால் ஒரு வேலை எனக்கு கிடைக்கும் அனுபவம்.

71.
If I don't do a job I won't get experience.
நான் செய்யாவிட்டால் ஒரு வேலை எனக்கு கிடைக்காது அனுபவம்.

72.
If I had done a job I would have got experience.
என்னால் செய்யப்பட்டிருந்தால் ஒரு வேலை எனக்கு கிடைத்திருக்கும் அனுபவம். (செய்யவும் இல்லை கிடைக்கவும் இல்லை)

73.
It is time I did a job.
இது தான் நேரம் நான் செய்வதற்கு ஒரு வேலை.

கவனத்திற்கு:

உதாரணமாக மேலே நாம் கற்றப் பாடத்தில் "do a job" எனும் வார்த்தை சில இலக்கங்களின் போது "doing a job" என்று வந்துள்ளதை அவதானியுங்கள். அதாவது பிரதான வினைச்சொல்லுடன் 'ing' யும் இணைத்து பயன்படுத்தப்பட்டுள்ளது. அவ்விலக்கங்களை கீழே கொடுத்துள்ளோம். இவ்விலக்கங்களின் போது எப்பொழுதும் பிரதான வினைச் சொல்லுடன் "ing" யையும் இணைத்தே பயன்படுத்த வேண்டும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

Verb with + ing: 2, 8, 9, 10, 11, 12, 31, 37, 46, 47, 48, 49, 50, 51, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69.

உதாரணம்:

speak in English
speaking in English. என்று வந்துள்ளதை அவதானிக்கவும்.

Homework:

கீழே 10 வாக்கியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை மேலே நாம் கற்றதைப் போன்று ஒவ்வொரு வாக்கியங்களையும் 73 விதமாக மாற்றி எழுதி பயிற்சி செய்யவும். எழுதும் பொழுது வாசித்து வாசித்து எழுதுங்கள். அது மிக எளிதாக உங்கள் மனதில் பதிந்துவிடும்.

1. I speak in English.
நான் பேசுகின்றேன் ஆங்கிலத்தில்.
2. I write a letter.
நான் எழுதுகின்றேன் ஒரு கடிதம்.
3. I listen to News.
நான் செவிமடுக்கின்றேன் செய்திகளுக்கு.
4. I fill up the form.
நான் நிரப்புகின்றேன் விண்ணப்பம்.
5. I go to school.
நான் போகின்றேன் பாடசாலைக்கு.
6. I do my homework.
நான் செய்கின்றேன் வீட்டுப்பாடம்.
7. I read a book.
நான் வாசிக்கின்றேன் ஒரு பொத்தகம்.
8. I travel by bus.
நான் பிரயாணம் செய்கின்றேன் பேரூந்தில்.
9. I look for a job.
நான் தேடுகின்றேன் ஒரு வேலை.
10. I ride a bike.
நான் ஓட்டுகின்றேன் உந்துருளி.

கவனிக்கவும்

உதாரணமாக "speak in English" எனும் ஒரு வாக்கியத்தை எடுத்துக் கொண்டோமானால் அதை:

I speak in English.
நான் பேசுகின்றேன் ஆங்கிலத்தில்.

I am speaking in English.
நான் பேசிக்கொண்டிருக்கின்றேன் ஆங்கிலத்தில்.

I spoke in English.
நான் பேசினேன் ஆங்கிலத்தில்.

I didn't speak in English.
நான் பேசவில்லை ஆங்கிலத்தில்.

I will speak in English.
நான் பேசுவேன் ஆங்கிலத்தில்.

என மேலே காட்டியுள்ளதைப் போன்று அதே இலக்க வரிசைக் கிரமத்தில் 73 வாக்கியங்களாக மாற்றி எழுதி பயிற்சி செய்யவும். இது மிகவும் இலகுவான ஓர் பயிற்சி முறையாகும்.

Saturday, March 27, 2010

இறைமறைஇன் அறிவியல் தத்துவங்கள்

இறைமறைஇன் அறிவியல் தத்துவங்கள்பெண் சிசுவதைக்கு முற்றுப்புள்ளி

கடந்த தொடரில் பெண் சிசு எவ்வளவு பெரிய கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு வந்தன என்பதைப் பார்த்தோம். இந்த கொடுமைகளுக்கு, ஈவு இரக்கமற்ற ஈனச்செயலுக்கு முற்றுபுள்ளி வைக்க மார்க்கமே இல்லையா? நிச்சயம் இருக்க வேண்டும். இந்த கொடூரத்திற்கு சமுதாயத்திலிருந்து இறுதி விடை கொடுத்துவிட வேண்டும்.

என்ன குற்றத்திற்காக இந்த சிசு கொடூரமாக கொல்லப்பட்டது என மறுமை நாளில் இந்த குழந்தை பற்றி விசாரிக்கப்படும் என்பது உணர்த்தப்படாத வரை, வேறு எந்த வழிமுறையினாலும் இந்த குற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது. மறுமை நாள் விசாரணையில் மாட்டிக் கொள்வோம் என்று இந்த சமுதாய மக்கள் புரிய ஆரம்பித்துவிட்டால் அவர்களிடையே இந்த குற்றம் அறவே இல்லாமல் ஆகிவிடும். அன்று குர்ஆன் உருவாக்கிய மிகப்பெரிய இஸ்லாமிய சமுதாயம் அதற்கு மிகச் சரியானதொரு சிறந்த எடுத்துக்காட்டாக இன்றும் திகழ்கிறது.

இறைமறைஇன் அறிவியல் தத்துவங்கள்

கடந்த தொடரில் கரு ஆணாக அல்லது பெண்ணாக இருப்பதற்கு ஒரு பெண் காரணமாக இருப்பதில்லை என்பதைப் பார்த்தோம் இந்தத் தொடரில் அதற்குக் காரணம் ஆண்தான் என்பதைத் தெரிந்து கொள்வோம்.

கருவில் வளரும் குழந்தையின் பாலினத்தைத் தீர்மானிப்பது ஆண்தான் என்பதை அறிவியல் ரீதியாக தெரிந்து கொள்வதற்கு முன் சில அடிப்படைத் தகவலை நாம் தெரிந்தாக வேண்டும்.

பரம்பரையின் இரகசியம் அடங்கிய செல்

உயிரினங்கள் அனைத்தும் செல் எனப்படும் நுண்ணிய பகுதியால் ஆக்கப்பட்டுள்ளதாகும். மரம், செடி, கொடி, தாவரங்கள் அனைத்தும் செல்லின் தொகுப்பே. சுருக்கமாகச் சொல்வதானால் உயிரினத்தின் துவக்கமே செல்தான். கருவின் நிலையும் இந்த செல்களின் தொகுப்பு என்பதால், செல்லின் செயல்பாடுகள் பற்றியும், அதன் அங்கங்கள் பற்றியும் சற்று தெரிந்து கொள்வது, கருவறையில் சங்கமமாகும் விந்தணு, சினை முட்டை பற்றித் தெளிவாகத் தெரிந்து கொள்வதற்கு துணை புரியும். மேலும், அங்கு உருவாகும் கருவின் பாலை (Sex) விந்தணு எவ்வாறு தீர்மானிக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வதற்கும் உறுதுணையாக அமையும்.

ஒரு செல்லின் சராசரி எடை, ஒரு கிராமின் நூறு கோடியில் ஒரு பகுதியாகும் என்றால், செல் எந்தளவிற்கு நுண்ணியது என்பதை புரிந்து கொள்ளுங்கள். இதில் சில நிமிடங்கள் மட்டும் உயிர் வாழக் கூடியது, இரண்டு மாதங்கள், பல வருடங்கள், அதற்கும் மேலாக உயிர்வாழக் கூடியது என பல வகையான செல்கள் உண்டு. நாம் மனிதக் கருவியல் பற்றி புரிந்து கொள்ளும் முயற்சியில் உள்ளதால் மனித செல்கள் பற்றிய செய்திகளைத் தெரிந்துகொள்வோம்.

ஒரு மனிதனின் உடல் கோடிக்கணக்கான செல்களின் தொகுப்பாகும். மனித உடலில் இடைவிடாது செல் பெருக்கம் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. ஒரு வினாடிக்கு 12.5 கோடி எனும் விகிதத்தில் செல்கள் புதுபிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. ஒரு நிமிடத்திற்கு 750 கோடி செல்கள் பெருக்கம் நடை பெறுகிறது. அதன் படி ஒரு மணிநேரத்தில் எத்தனை கோடி செல்கள், ஒரு நாளைக்கு எத்தனை கோடி செல்கள் புதுபிக்கப்படும் என்பதை சிந்தித்துப் பாருங்கள். பழைய செல் செயலிழந்து இறந்து விடும் போது, புதிய புதிய செல்கள் தோன்றிக் கொண்டே இருக்கும். நாம் அறியாமலேயே இந்நிகழ்ச்சி நமது உடலில் இடை விடாது தொடர்ந்து நடை பெற்று வருகின்றன. இந்த மனித செல்களில் மிகச் சிறியது ஆண் உயிரணுவாகவும், மிகப் பெரியது பெண்கருமுட்டையாகவும் இருக்கிறது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

செல் அங்கங்கள்

முக்கியமாக செல்சுவர், அதனை அடுத்து திரவ வடிவத்திலான சைட்டோபிளாசம், அதில் மிதக்கும் மைட்டோ காண்ட்ரியா, அதன் மையப்பகுதியில் உட்கருவாகத் திகழும் நியூக்ளியஸ் ஆகிய முக்கிய பகுதிகளை அங்கங்களாகக் கொண்டுள்ளதாகும் ஒரு செல். மைட்டோ காண்ட்ரியாவின் பணிகளில் ஒன்று, செல்சுவாசிப்பதற்கு துணை புரிவதாகும்.

இதயம் போன்று விளங்கும் உட்கருவான நியூக்ளியஸ் ஒருசெல்லின் மிக மிக முக்கிய பகுதியாகும். இந்த உட்கரு இன்றி ஒரு செல் தனது பயணத்தை தொடர முடியாது. இந்த நியூக்ளியஸித்திற்குள் மிக சிறிய துணுக்குகளாக புரோட்டின்கள் உள்ளன. இதனை குரோமோசம் என்று கூறப்படும். ஒவ்வொருசெல்லினுள் 46 குரோமோசம்கள் உள்ளன. இந்த குரோமோசோமத்திற்குள் தான் மனித வம்ச பரம்பரைச் செய்திகளை உள்ளடக்கிய வளை போன்ற நுண்ணிய துணுக்குகளான நியூக்ளிக் அமிலங்கள் என்று ஒன்று உண்டு. அதனைச் சுருக்கமாக டி. என். . (D.N.A.) (டி ஆக்ஸிரிபோ நியூக்ளிக் ஆசிட்) என்று கூறப்படும். இது முதன் முதலில் 1953ம் ஆண்டுதான் பிரட்னில் காவண்டிஷ் ஆய்வுக் கூடத்தில் வாட்ஸன் (Watson), க்ரிக் (Crick) ஆகிய இரு உயிரியல் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு இந்த டி.என். ஆய்வில் மேலும் பல அறிஞர்கள் ஈடுபட்ட போது வியக்கத் தக்க பல கோடி அரிய செய்திகள் அதில் பதிவு செய்யப்பட்டிருப்பதை அறிந்து கொள்ள முடிந்தது. வம்சபரம்பரைச் செய்திகள், பின் வரும் வாரிசுகள் பற்றிய செய்திகள், ஒரு மனிதனை வேறுபடுத்தி அடையாளப்படுத்தும் செய்திகள் என வேறுபட்ட பல செய்திகள் அதில் பதிவு செய்யப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறு வெவ்வேறு செய்திகளை குறிப்பிட நியூக்ளிக் அமிலங்கள் கொண்ட பல தொகுப்புகள் இந்த டி.என்..வில் உள்ளது. இந்தத் தொகுப்புகளைத்தான் ஜீன் (gene) என்று குறிப்பிடுகின்றனர். கண், காது, மூக்கு, கை, கால், உடலமைப்பு உறுப்புகள் எவ்வாறு எந்த இடத்தில், எந்தெந்த நிறத்தில் இருக்க வேண்டும் என்பதையும் தீர்மானிப்பது இந்த ஜீன்தான். முன்னோரின் தோற்றம் வாரிசுகளுக்கு ஏற்படுவதற்கும் இந்த டி.என்..வில் உள்ள ஜீன்தான் காரணம். கருவில் வளரும் குழந்தை பிறந்து, இறக்கும் வரை அதன் இயக்கம் எவ்வாறு இருக்க வேண்டும், அதன் இரத்த அழுத்தம், பார்க்கும், கேட்கும், விளங்கும் திறன் அனைத்தையும் தீர்மானிப்பதும் இந்த ஜீன்கள்தான். ஒவ்வொரு வயதிலும் எவ்வாறு உடலமைப்பு இருக்கும் என்பதையும் இந்த டி.என்..வில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருக்கும்.

இந்த ஜீன்களின் தீர்மானத்தில் சிறு சறுக்கல் ஏற்பட்டு விட்டால் கூட, கண் இருக்க வேண்டிய இடத்தில் காதும், மூக்கு இருக்க வேண்டிய இடத்தில் வாயும் என மாறிவிடும். மேலும், பல்வேறு பிறவி நோய்கள், பிறவி ஊனங்கள் ஏற்படுவதற்கும், புற்று நோய் தோன்றுவதற்கும் காரணமாகவும் அது அமைகிறது.

இதில் வியப்பு என்னவெனில், டி.என்.. வில் பதிவு செய்யப்பட்டுள்ள செய்திகளில் 3 விழுக்காடுதான் இது வரை அறியப்பட்டுள்ளன மீதமுள்ள 97 விழுக்காடு செய்திகள் இதுவரையும் அறியப்பட வில்லை என்று விஞ்ஞான உலகம் கையை விரிக்கிறது. அவ்வளவு செய்திகளை அதனுள் பதிவு செய்து வைத்தவன் யார்? திகைப்பூட்டும் இந்த ஆய்வு, இறுதியில் இறை நம்பிக்கையில் போய் முடிகிறது. அறிய முடியாத அந்த 97 விழுக்காடு செய்திகள் அதனைப்பதிந்து வைத்த இறைவனுக்கே வெளிச்சம். இது பற்றி எழுத வேண்டிய செய்திகள் ஏராளம். இது அதற்குரிய இடம் இல்லை. எனவே, நமது நோக்கத்திற்கு வருவோம்.

செல் பெருக்கம்

செல் பெருக்கம் மனித உடலில் இடையுறாது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்று பார்த்தோம். உடலியல் செல், இனவிருத்தி செல் என இருவகை செல்கள் உள்ளன. இந்த இரண்டின் பெருக்கமும் இரு வேறு முறையில் நடைபெறுகிறது.

ஒரு உடலியல் செல் குறிப்பிட்ட வளர்ச்சியை அடைந்ததும் தன்னைத் தானே இரட்டிப்பாக ஆக்கிக் கொள்கிறது. அப்போது, அதன் உட்கருவான நியூக்ளியஸ் குறுக்கு வாக்கில் இரண்டாக பிரிந்து, அதனுள் இருக்கும் 46 குரோமோசோம்கள் 23, 23 என பிரிந்து எதிரெதிராக ஒதுங்கிவிடுகிறது. அப்போது குரோமோசோம்களில் உள்ள டி.என்.. வானது நீளவாக்கில் பிளந்து கொள்ளும். அதனால் ஏற்கனவே இரண்டாகப் பிரிந்து, ஒதுங்கியிருந்த ஒவ்வொரு 23 குரோமோசோம்களும் நீளவாக்கில் பிளந்து கொள்கின்றன. நீளவாக்கில் பிரிந்த குரொமோசோம்கள், ஆர்.என்.. (ரிபோ நியூக்ளிக் ஆசிட்)வின் துணையுடன் எதிர் எதிராக உள்ளதுடன் இணைந்து, இரண்டு தனிச்செல்களாக ஆகிவிடுகிறது. அப்போது ஒவ்வொரு செல்லும் 46 குரோமோசோம்களைக் கொண்டிருக்கும். தாய் செல்லில் இருந்த அனைத்து தகவலும், பிரிந்த செல்கள் இரண்டிலும் ஆர்.என்.. வின் மூலம் பதிவு செய்யப்பட்டிருக்கும். இவ்வகையான செல் பெருக்கத்தினை மைடாஸிஸ் (Mitosis) என்று கூறப்படும். அதாவது மிகுதல் பிரிகை ஆகும்.

இனவிருத்தி செல் பெருக்கம்

இனவிருத்தி செல் பெருக்கம் இதற்கு சற்று மாறு பட்ட முறையில் நடைபெறும். இனவிருத்தி உறுப்புகளில் உருவாகும் ஆணுயிர் செல்லானது 23 ஜோடி குரோமோசோம்களையும், பெண் கருமுட்டை செல்லானதும் 23 ஜோடி குரோமோசம்களையும் கொண்டிருக்கும். இந்த ஒவ்வொன்றிலும் முள்ள 23 ஜோடி குரோமோசோம்களில் 22 ஜோடியானது வம்சப்பரம்பரைச் செய்திகளை உள்ளடக்கியுள்ளன. இதனை உடற்கூறு குரோமோசோம்கள் (Autosomes) என்று கூறப்படும். இந்த வகைக் குரோமோசோம்கள் தான் பிறக்கப் போகும் சிசுவின் உடல் கூறு இயல்புகளையும், அதன் இயக்கங்களையும், அதன் இயல்புகளையும் தீர்மானிக்கும்.

23 வது ஜோடியானது பாலினத்தை (Sex) தீர்மானிக்கும் செய்தியினை உள்ளடக்கி இருக்கும். இதனை பாலினக் குரோமோசம் (Sex Chromosomes) என்று குறிப்பிடுகின்றர். இதில் ஆண் உயிரணுவில் உள்ள 23வது ஜோடியான இனக் குரோமோசம் X, Y என்றும், பெண் கருமுட்டையில் X, X என்றும் இருக்கும். Y என்பது ஆண் பாலைத் தீர்மானிக்கும், X பெண் பாலைத் தீர்மானிக்கும் குரோமோசம் ஆகும்.

இந்த 23 ஜோடி குரோமோசம்கள் முதிர்ச்சி அடையும் போது, இரண்டாக பிரிந்துவிடுகிறது. விந்தணுச் செல் இரண்டாகப் பிரியும் போது, 22 உடற்கூறு குரோமோசம்கள் (ஆட்டோசோம்), ஒரு X எனும் பெண் இனக் குரோமோசம் என்ற ஒரு பாதியாகவும், 22 உடற்கூறு குரோமோசம்கள் (ஆட்டோசம்), ஒரு Y எனும் ஆண் இனக் குரோமோசம் என்ற இன்னொரு பாதியாகவும் பிரிந்து விடும்.

சினை முட்டை செல்லிலும் இதே போன்றுதான் இரு பாதிகளாகப்பிரிந்து நிற்கும். ஆனால், இங்கு இரு பாதியிலும் X எனும் பெண் இனக் குரோமோசம்தான் இருக்கும். இதனை மையாஸிஸ் (Meosis) குன்றுதல் பிரிகை என்று கூறப்படும்.

விந்தணுச் செல், சினை முட்டையை அடையும் போது இரண்டிலும் உள்ள பிரிந்த 23, 23 செல்கள் ஒன்றிணையும். அப்போது ஒரு செல்லுக்குத் தேவையான 46 குரோமோசம்களைக் கொண்ட ஒரு செல்லாக வடிவம் பெறுகிறது. இவ்வாறு ஒன்றிணையும் போது விந்தணுச் (ஆணுயிர்) செல்லின் இனக் குரோமோசோம் X ஆக இருந்தால் அப்போது உருவாகும் சிசு பெண்ணாகவும், விந்தணுச் செல்லின் இனக் குரோமோசோம் Y ஆக இருந்தால் அப்போது உருவாகும் சிசு ஆணாகவும் இருக்கும் என இன்றைய மருத்துவ விஞ்ஞானம் கூறிக் கொண்டிருக்கிறது. சினை முட்டை செல்லின் பாலினக் குரோமோசம் எல்லா நிலையிலும் ஒன்றுபோலவே இருக்கும். பாலினத்தை (Sex) தீர்மானிப்பதில் இதற்கு எந்த பங்களிப்பும் இல்லை என்பதை தெளிவு படுத்துகிறது.

இந்த இடத்தில் இன்னொரு உண்மையையும் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது, விந்தணுவும், சினை முட்டையும் ஒன்றிணையும் போதே அந்தக் கருவின் பாலினம் என்னவாக இருக்கும் என்பது தீர்மானிக்கபட்டுவிடுகிறது. ஆனால் அதனை உணர்ந்து கொள்ளும் திறனோ, அதனை கண்டு பிடிக்கும்அறிவியல் ஆற்றலோ மனிதனிடம் இல்லை. அது இறைவன் மட்டுமே அறிந்த இரகசியமாக உள்ளது. இந்த இடத்தில், கருவறையில் உள்ளதை அறிந்தவன் அல்லாஹ் மட்டுமே! என்ற இறை வசனம் விஞ்ஞானத்தை மிகைத்து நிற்பதை உங்களது மேலான கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.

செல் தியரி

செல் எனும் வார்த்தைப் பிரயோகமே 1665 ஆண்டிற்குப் பிறகுதான் நடைமுறையில் வந்தது. லியோன் ஹுக் என்பவரால் 1591ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட நுண்ணோக்கியின் (மைக்ரோ ஸ்கோப்) மூலம் உயிரியல் ஆய்வில் ஈடுபட்ட ரோபெர்ட் ஹுக் என்பர், தேன் கூட்டில் உள்ள சிறிய அறைகள் போல உயிரினங்களின் உடலில் நுண்ணிய தடுப்புச் சுவர்கள் கொண்ட சிறிய சிறிய அறைகள் நிறைய இருப்பதைக் கண்டுபிடித்தார். இவற்றைக் குறிப்பிடுவதற்கு அறை என்ற அர்த்தம் உள்ள செல் என்ற வார்த்தையை பிரயோகம் செய்தார். அன்று முதல் இது அறிவியல் வழக்குச் சொல்லாக நடைமுறைக்கு வந்தது. அவருக்கு பின் வந்த உயிரியல் அறிஞர்கள் பலரும், இந்த செல் ஆய்வினை தொடர்ந்து மேற்கொண்ட போது, மனிதன், விலங்கு மட்டுமல்லாமல், செடி, கொடி தாவரங்கள் அனைத்திலும் இந்த செல் இருக்கும் உண்மையைக் கண்டுபிடித்தார்கள். இதனை முதலில் 1839 ஆண்டு ஸ்வான் என்ற விஞ்ஞானிதான் கண்டுபிடித்தார். 1938ம் ஆண்டு ஸ்லீடன் என்ற விஞ்ஞானி தனது தாவரவியல் ஆய்வின் மூலம் ஸ்வானின் கண்டுபிடிப்பை உறுதிப்படுத்தினார்.

ஆரம்ப காலகட்டங்களில் இந்த செல் பற்றிய ஆய்வு, செல் சுவர் அளவிலேதான் இருந்து வந்தது. செல் சுவரைத் தாண்டி ஆய்வு செய்வதற்குப் போதுமான உபகரணங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. 19ம் நூற்றாண்டின் துவக்கத்தில் மின்னணு நுண்நோக்கி (Electron Microscope) கண்டு பிடிக்கப்பட்டப் பின்பு அதன் துணையால் 1831ஆம் ஆண்டு ராபர்ட் ப்ரவ்ன் என்ற விஞ்ஞானி செல்லின் மையப்பகுதியல் உருண்டை வடிவிலான ஒரு பொருள் இருப்பதைக் கண்டுபிடித்து, அதற்கு நியூக்ளியஸ் (Nucleus) எனவும் பெயரிட்டார். அதனைத் தொடர்ந்து, உயிரினச் செல் சுவரை அடுத்து ஒரு வகையான கெட்டிப் பொருள் இருப்பது 1846ம் ஆண்டு வான்மோல் என்ற விஞ்ஞானியால் கண்டுபிடிக்கப்பட்டது. இதனைக் கண்டுபிடித்த ஆரம்பக் காலகட்டங்களில், அது பல பெயர்கள் கொண்டு அழைக்கப்பட்டது. பின்னாளில் அதற்கு புரோட்டோபிளாசம் என்ற பெயர் நிலை பெற்றது. மேலும் பல ஆய்வுகளை உயிரியல் விஞ்ஞானிகள் மேற் கொண்ட போது, திரவப் பொருள் இருப்தையும் அறிய முடிந்தது. அதற்கு சைட்டோப்பிளாசம் எனவும் பெயர் சூட்டப்பட்டது. 1890ம் ஆண்டுவாக்கில் இந்த சைட்டோப் பிளாசத்திற்குள் நுண்ணிய திடப்பொருள் மிதந்து கொண்டிருப்பதை அல்ட்மான் என்ற விஞ்ஞானி கண்டுபிடித்தார். அதனை இன்று மைட்டோ காண்ட்ரிய (Mitochondtia) என்று நாம் அறிந்து வருகிறோம். அதே ஆண்டில்தான் வால்டேயேர் எனும் விஞ்ஞானி உட்கருவினுள் (Nucleus) குரோமோசம்கள் இருப்பதைக் கண்டுபிடித்தார்.

விஞ்ஞானிகளின் ஆய்வுப் பயணம் தொய்வின்றி தொடர்ந்து கொண்டிருந்ததன் பயனால், 1953ம் ஆண்டு வாட்சன், க்ரிக் என்ற இரு உயிரியல் விஞ்ஞானிகளும் சேர்ந்து, குரோமோசம்களுக்குள் மரபணுக் கூறான டி.என்.. (D.N.A) இருப்பதைக் கண்டுபிடித்தனர். இந்த கண்டு பிடிப்பு உயிரியல் ஆய்வில் மிகப் பெரிய மறுமலர்ச்சி ஏற்படக் காரணமாக இருந்தது. மேலும் அது திகிலூட்டும் திருப்புமுனையாகவும் அமைந்திருந்தது. மனிதப்பரம்பரைச் செய்திகள் அனைத்தும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ள அதே நேரத்தில் பல் வேறு தகவல்கள் அதில் பதிவு செய்யப்பட்டிருப்பதும் அறியமுடிந்தது. மேலும் ஆய்வினை மேற் கொண்ட போது முடிவில்லாத சங்கிலித் தொடராக அதன் செய்தி தொடர் அமைந்துள்ளதும் கண்டு பிடிக்கப்பட்டது. மரபணுக்கூறான டி.என்.. (D.N.A) வில் பதிவு செய்யப்பட்டிருக்கும் செய்திகளில் 3 விழுக்காடு தகவல்கள்தான் இது வரை அறியப்பட்டுள்ளன. அந்த தகவல்கள் மட்டும் பல இலட்சம் பக்கங்களை நிரப்பும் அளவிற்கு இருக்கின்றன என்றால், அறியப்படாத 97 விழுக்காடு தகவல்கள் எத்தனை கோடிப் பக்கங்களை நிரப்பக் கூடியதாக இருக்கும் என்பது மேதைகளுக்கே தலை சுற்றாக விளங்குகிறது. எனவேதான், 1958ம் ஆண்டு கோட்டர்ட் என்பர் செல்லடக்கச் செய்திகள் அனைத்தையும் நாம் சரியான முறையில் புரிந்து கொண்டால், உயிரினத்தின் உண்மை வடிவத்தைப் புரிந்து கொள்வோம் என்று அறிவிப்புச் செய்தார். அதன் பொருள்: இது வரையும் செல் பற்றிய செய்திகளையும், அதில் சார்ந்திருக்கும் மரபணுக் கூறான டி.என்.. பற்றியும் சரியாக அறிந்து கொள்ள முடியவில்லை என்பதை அவர் பறை சாற்றுகிறார்.

செல் ஆய்வின் பின்னணியை புரிந்து கொண்ட நாம், 1665ம் ஆண்டுக்கு அதாவது 338 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்கள் செல் பற்றியும், அதில் அடங்கியுள்ள குரோமோசம்கள் பற்றியும் துளி கூட அறிந்திருக்க வாய்ப்பில்லை என்பது மட்டுமல்ல, இதன் பெயர்களைக் கூட அவர்கள் கேட்டிருக்க மாட்டார்கள் எனும் போது 1423 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு மனிதர் இந்த செய்திகளை யெல்லாம் அறிந்திருந்தார் என்று சொன்னால் அதனை ஏற்க முடியுமா? நிச்சயமாக யாரும் இதனை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

கருச்சிசுவின் பாலினத்தை தீர்மானிப்பது விந்தணுதான் என்ற இந்த அறிவியல் உண்மையும் 1953 ஆம் ஆண்டிற்குப் பிறகுதான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது டி.என்.. (D.N.A) என்ற துணுக்கினை கண்டறிந்தப் பிறகுதான் இது சாத்தியமாயிற்று. அதற்கு முன்பு வரை இந்த செய்தியினையும் யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

ஆனாலும் 1423 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்தவரான முஹம்மது (ஸல்) அவர்களின் மூலம் போதிக்கப்பட்ட இறைவேதமான குர்ஆனில் இந்தச் செய்தி தெளிவாகவே சொல்லப் பட்டிருக்கிறது. இந்தச் செய்தியை அவரால் சாதாரண மனிதர் என்ற அடிப்படையில் சொல்லியிருக்க முடியுமா? என்றால் நிச்சயம் முடியாது. இந்த டி.என்.. வையும், அது சார்ந்திருக்கும் குரோமோசோம்களையும் யார் படைத்தானோ, அவனால் மட்டுமே எல்லாக் காலத்திலும் சொல்ல முடியும்.

சிசுவின் பாலினத்தை தீர்மானிப்பது எது? என்ற இந்தச் செய்தி குர்ஆனில் இடம் பெற்றிருப்பது, முஸ்லிம்களின் வேத நூலான குர்ஆன், இறைவானல் இறக்கியருளப்பட்டதுதான் முஹம்மது நபி (ஸல்) அவர்களால் புனைந்து சொல்லப்பட்டதல்ல என்பதனை இன்றளவும் பறைச்சாற்றிக் கொண்டும் இருக்கிறது. இந்த செய்தி திருமறையில் ஒரு இடத்தில் அல்ல, பல இடங்களில் சொல்லப்பட்டிக்கிறது. எந்தெந்த வசனத்தில், எவ்வாறு இந்தக் கருத்து சொல்லப் பட்டுள்ளது என்பதை அடுத்த தொடரில் இன்ஷா அல்லாஹ் பார்ப்போம்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்